Tuesday, June 9, 2015



படித்ததில் பிடித்தது - நட்சத்திரத்திருமுறைப் பாடல்கள் -1
1.அசுபதி
தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந்து
உன்றன் சரண்புகுந்தேன்
எக்காத லெப்பய னுன்றிறம்
அல்லா லெனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிக
வட மேருவென்னும்
திக்கா திருச்சத்தி முற்றத்து
உறையுஞ் சிவக்கொழுந்தே. 4-96-9
2.பரணி
கரும்பினு மினியான் றன்னைக்காய்
கதிர்ச் சோதி யானை
இருங்கடலமுதந்தன்னை
இறப்பொடு பி றப்பிலானைப்
பெரும்பொருட் கிளவி யானைப்
பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே. 4-74-3
3.கார்த்திகை
செல்வியைப் பாகங் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு மா
மலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத காஞ்சி
மா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்
இலங்குமேற் றளிய னாரே. 4-43-8
4.ரோகிணி
எங்கே னும்மிருந்துன் னடியேன்
உனைநினைந்தால்
அங்கே வந்தென்னொடும்
உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை யறுத்திட்டு
எனையாளுங்
கங்கா நாயகனே கழிப்
பாலை மேயானே. 7-23-2
5.மிருகசீரிடம்
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
6-55-7
6.திருவாதிரை
கவ்வைக்கடல் கதறிக்கொணர்
முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந்
தாடுந்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய்
தெழுவார்அடி தொழுவார்
அவ்வத்திசைக் கரசாகுவர்
அலராள் பிரியாளே 7-82-3
7.புனர்பூசம்
மன்னு மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்
பொரு ளாயின தூக்கமலத்
தன்ன வடிவின வன்புடைத்
தொண்டர்க் கமுதரும்பி
இன்னல் களைவன இன்னரம்பரான்
தன் இணையடியே . 4-100-1
8.பூசம்
பொருவிடை யொன்றுடைப்
புண்ணியமூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கை
மணாளனுலகுக்கெல்லாம்
திருவுடை யந்தணர் வாழ்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
திருவடி யைக்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே. 4-80-2
9.ஆயில்யம்
கருநட்ட கண்டனை யண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்ய
வல்லானைச் செந்தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக்கு
இறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர்
கோனென்று வாழ்த்துவனே. 4-81-1
10.மகம்
பொடியார் மேனியனே புரி
நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள
ரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே. 7-28-1
11.பூரம்
நூலடைந்த கொள்கையாலே
நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழன்மேவி ய
அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச்
சேய்ஞலூர் மேயவனே 1-48-1
12.உத்திரம்
போழும் மதியும் புனக்கொன்றை
புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ
உன்னைத் தொழுவார் துயர்போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத்
ஐயா றுடைய அடிகேளோ 7-77-8
13.அஸ்தம்
வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா வென்றென்
ஓதியே மலர்கள் தூவி யொருங்கி
நின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய்
படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே யால வாயில் அப்பனே
அருள்செ யாயே. 4-62-1
14.சித்திரை
நின்னடியே வழிபடுவான் நிமலா
நினைக் கருத
என்னடியானுயிரைவவ்வேலென்று
அடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு
நீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய்
நெடுங்களமே யவனே 1-52-3
15.சுவாதி
காவினை யிட்டுங் குளம்பல
தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித்தீர்
என்றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றா
திரு நீலகண்டம். 1-116-2
16.விசாகம்
விண்ணவர் தொழுதேத்த நின் றானை
வேதந்தான் விரித்தோத வல்லானை
நண்ணினார்க் கென்றும் நல்லவன்றன்னை
நாளும் நாம் உகக்கின்ற பி ரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக்கம்பன் எம்மானைக்
காணக் கண்அடியேன்பெற்றவாறே 7-61-7
17.அனுஷம்
மயிலார் சாயன் மாதோர் பாகமா
எயிலார் சாய வெரித்த வெந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே. 1-23-5
18.கேட்டை
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை யம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லையேற்றினர் கோடிகாவாஎன்றங்கு ஒல்லையேத்துவார்க்கு ஊனமொன்றில்லையே 5-78-3
19.மூலம்
கீளார் கோவணமுந் திருநீறு
மெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவா
எனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடி
உள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே 7-24-2
20.பூராடம்
நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னனாய் மன்னவர்க்கோர் அமுதமானாய்
மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளேஉன்னை
என்னானாய் என்னானாய் என்னில் அல்லால்
ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே 6-95-7
21.உத்திராடம்
குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்
ஒருபிழைபொறுத்தால் இழிவுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ் திருவாரூர்ச்
செம்பொனே திரு வாவடுதுறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குஉறவு அமரர்கள் ஏறே 7-70-6
22.திருவோணம்
வேதமோதி வெண்ணூல்பூண்டு
வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார்
புலியி னுரிதோலார்
நாதாவெனவு நக்காவெனவு
நம்பா வெனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார்
பழன நகராரே. 1-67-1
23.அவிட்டம்
எண்ணு மெழுத்துங் குறியும்
அறிபவர் தாமொழியப்
பண்ணி னிசைமொழி பாடிய
வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும்
பிரான் திருவேதிகுடி
நண்ண அரிய வமுதினை
நாமடைந் தாடுதுமே. 4-90-6
24.சதயம்
கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே 7-69-2
25.பூரட்டாதி
முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்
நோக்கும் முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்த
வெண்ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித்
தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக்
கூத்தன் குரைகழலே 4-81-7
26.உத்திரட்டாதி
நாளாய போகாமே நஞ்சணியும்
கண்டனுக்கே
ஆளாய வன்புசெய்வோம் மடநெஞ்சே
அரன் நாமம்
கேளாய்நங் கிளை கிளைக்கும்
கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி
எம் பெருமானே 1-62-1
27.ரேவதி
நாயினுங் கடைப்பட் டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே
அமுத மொத்து
நீயுமென் நெஞ்சி னுள்ளே
நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில்
நோக்கி நீ அருள்செய்வாயே 4-76-6
( எழுத்துக்கள் - http://sivanadimai.blogspot.ie/2013/10/1.html சொந்தமானது)